முகப்பு
தேசியச் செய்திகள்

பயங்கரவாதத்தால் இனி எந்த மகன்களும் உயிரிழக்க கூடாது: சிஆர்பிஎஃப் வீரரின் தந்தை உருக்கம்

இந்திய விமானப்படை நடத்தியுள்ள இந்த தாக்குதல் எனக்கு மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 26 பிப்ரவரி, 2019 at 7:10 PM
பகிர்:

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரரின் தந்தை சுதிப் பிஸ்வாஸ் கூறுகையில், எங்கள் மகன் மீண்டும் திரும்பி வரமாட்டான் என்று தெரிந்திருந்தும் இந்திய விமானப்படை நடத்தியுள்ள இந்த தாக்குதல் எனக்கு மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதலில் எனது மகன் உயிரிழந்தது போன்று பாதுகாப்புப் படைகளில் உள்ள மற்ற மகன்கள் யாரும் இனி பயங்கரவாதிகளால் கொல்லப்படும் சூழ்நிலை ஏற்படக்கூடாது என்று தெரிவித்தார். 

முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதியன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு திட்டமிட்டு நடத்தியது தெரியவந்தது. 

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப் படையின் விமானங்கள் செவ்வாய் அதிகாலை பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள பால்கோட் பகுதியில் வெடிகுண்டுகளை வீசி பதில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்களை அழித்தன. இந்த தாக்குதலில் சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.