தேசியச் செய்திகள்

நீண்ட தலைமுடி செய்து சென்னையில் 'கின்னஸ் சாதனை முயற்சி'

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நீண்ட தலைமுடி செய்து கின்னஸ் சாதனை முயற்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

ENS

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நீண்ட தலைமுடி செய்து கின்னஸ் சாதனை முயற்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

புறநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறியீடான பிங்க் நிறத்தில் இந்த தலைமுடி செய்யப்பட்டது.

மொத்தம் 3 மணிநேரம் 11 நிமிடங்கள் 31 விநாடிகளில் 485.5 மீட்டர் நீளத்துக்கு இந்த தலைமுடி செய்யப்பட்டது. அழகுக்கலை நிபுணர்கள், சலூன் உரிமையாளர்கள், சிகை அலங்கார கலைஞர்கள் உட்பட மொத்தம் 100 பேர் இந்த முயற்சியில் பங்கேற்றனர். 

முன்னதாக, 362 மீட்டர் நீளத்துக்கு பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட செயற்கை தலைமுடி தான் இதுவரை மிகப்பெரியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT