தேசியச் செய்திகள்

கொல்கத்தாவில் 1,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்: கூட்டாளிகளுடன் தலைவன் கைது

கொல்கத்தாவில் 1,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இருமாநில சிறப்பு அதிரடிப்படையினர் 3 பேரை கைது செய்தனர். 

ENS

கொல்கத்தாவில் 1,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இருமாநில சிறப்பு அதிரடிப்படையினர் 3 பேரை கைது செய்தனர். கொல்கத்தாவில் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய திடீர் தேடுதல் வேட்டையில் 27 பைகளின் மூலம் லாரியில் கடத்தப்பட்ட ஆயிரம் கிலோ வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக இந்திரஜித் பூயி (25) மற்றும் பத்மலோச்சன் தே (31) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சுகந்த சாஹூ (42) என்பவரை ஒடிஸா சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

இருமாநில சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து செயல்பட்டு நடத்திய விசாரணையில், சாஹூ என்பவன் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு தொடர்ந்து இதுபோன்று வெடிபொருட்களை கடத்திச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலைக்கு பலமுறை கடத்தப்பட்டுள்ளதாக ஒடிஸா டிஜிபி தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

SCROLL FOR NEXT