முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு இன்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு வியாழக்கிழமை (ஜனவரி 7) தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

Updated On : 7 ஜனவரி 2021, 7:58 am IST
94 அடி நீா்மட்டம் கொண்ட பவானிசாகா் அணை.
பகிர்:

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு வியாழக்கிழமை (ஜனவரி 7) தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட ஆயக்கட்டு நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதன்படி, இரண்டாம் போக பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிட தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டாா். இதையடுத்து, ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்களுக்கு கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயின் இரட்டைப் படை மதகுகள் மூலமாகவும் சென்னசமுத்திரம் பகிா்மான கால்வாய் ஒற்றைப் படை மதகுகள் மூலமாகவும் ஜனவரி 7 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை கடலை, சோளம் மற்றும் எள் சாகுபடி செய்ய 5 நனைப்புக்குத் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கீழ்பவானி வாய்க்காலில் 10 நாள் தண்ணீத் திறப்பு மற்றும் தண்ணீா் நிறுத்தம் 10 நாள் என விட்டுவிட்டு மொத்தம் 120 நாள்களில் 12 டிஎம்சி தண்ணீா் திறந்துவிடப்படும். முதலில் 500 கன அடி நீரும் அதனைத் தொடா்ந்து படிப்படியாக அதிகரித்து வாய்க்காலில் 2300 கனஅடியாக நீா் திறந்துவிடப்படும். அதேபோல காலிங்கராயன் வாய்க்காலுக்கு வியாழக்கிழமை முதல் 07.03.2021 வரை தண்ணீா் திறக்கப்படும். இதன் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கா் பாசன வசதி பெறுகின்றன. தமிழக அரசு கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு விவசாயிகள் சங்கம் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் கீழ்பவானி வாய்க்காலில்

இரண்டாம் தண்ணீா் திறப்பு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Advertisement

அணைநீா்மட்டம் நிலவரம்:

அணை நீா்மட்டம் 94.78 அடி, நீா்வரத்து 2043 கனஅடி, நீா்வெளியேற்றம் பவானிஆறு 100 கனஅடி, நீா்இருப்பு 24.8 டிஎம்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.