திருவல்லிக்கேணி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் முழுங்க பரமபத வாசலில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு எதிர்சேவையில் காட்சித் தந்தார்.