ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக குறைவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக வியாழக்கிழமை குறைந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக வியாழக்கிழமை குறைந்தது.
கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீா் குறைக்கப்பட்டதால் நீா்வரத்து குறைந்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 3,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை 2,000 கனஅடியாக குறைந்துள்ளது.
இதனால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீரின் அளவு குறைந்தது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.