மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண மண்டபத்தில் சரியாக காலை 9.22 மணியளவில் மிதுன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, தேவர்கள் வாழ்த்த மேளதாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் திருமண கோலத்தில், பிரியாவிடை அம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் புதுதாலி அணிந்து கொண்டனர். திருக்கல்யாணம் முடிந்ததும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement