முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கன்சந்த் சிங் உடல்நலக் குறைவால் இன்று(பிப்.27) காலமானது குறித்து...

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:21 AM
ரிங்கு சிங் - படம் | பிசிசிஐ
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:13 AM

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கன்சந்த் சிங் உடல்நலக் குறைவால் இன்று(பிப்.27) காலமானார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங், நீண்டகால உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் காலமானார் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக நொய்டா யாதர்த் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் மருத்துவர் சுனில் குமார் கூறியதாவது:

Advertisement

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:13 AM

உத்தரப்பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யாதர்த் மருத்துவமனையில் இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை கான்சந்த் சிங் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

"கடந்த சில நாள்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது, அதைத் தொடர்ந்து பிப்ரவரி 21 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் காலமானார்" என்று அவர் கூறினார்.

தந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், சென்னையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பயிற்சிக்கு நடுவில் ரிங்கு வீடு திரும்பினார். இருப்பினும், பிப்ரவரி 26 ஆம் தேதி ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அவர் மீண்டும் இந்திய அணியில் இணைந்தார்.

மார்ச் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் ரிங்கு சிங் மீண்டும் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங்கின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:15 AM
summary

Indian cricketer Rinku Singh's father, Khanchand Singh, passed away at a hospital in Greater Noida early Friday following a prolonged illness, family sources said.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:15 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.