ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி, கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மிகவும் புகழ்பெற்றது.திருக்கோயிலில், ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
பகல்பத்து, ராப்பத்து இயற்பா என 21 நாள்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுந்த ஏகாதசி பகல்பத்து உற்சவம் சனிக்கிழமை தொடங்கியது.இந்த ஆண்டுக்கான வைகுந்த ஏகாதசி பகல்பத்து உற்சவத்துக்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
வைகுந்த ஏகாதசி பகல்பத்து உற்சவத்தை முன்னிட்டு, கோயில் உள்பிராகாரம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.கோயில் உள்பிரகாரத்தில் வலம் வரும் நம்பெருமாள்.வெகு விமரிசையாகத் தொடங்கியது வைகுந்த ஏகாதசி பகல்பத்து உற்சவம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.