கொங்கு ஏழு சிவதலங்களுள் முதன்மை வாய்ந்த சிவஸ்தலமான அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் நடைபெற்ற மகா அபிஷேகம். 
ஆன்மிகம்

சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் - புகைப்படங்கள்

மார்கழி மாத திருவாதிரை தினத்தை முன்னிட்டு சிவ ஆலயங்களில் ஸ்ரீ ஆடல்வல்லானுக்கு சிறப்பு திரவியங்களால் மகா அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது.

DIN
கொங்கு ஏழு சிவதலங்களுள் முதன்மை வாய்ந்த சிவஸ்தலமான அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் கடந்த 10ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
சிவகாமியம்மாள் உடனமர் நடராஜப்பெருமானுக்கு பஞ்சாமிர்தம், நெய், தேன், கரும்பு, வில்வப்பொடி, நெல்லிப்பொடி, அரிசிமாவு உள்ளிட்ட திரவியங்களால் ஆடல்வல்லானுக்கு நடைபெற்ற மகா அபிஷேகம்.
சிவகாமியம்மாள் உடனமர் நடராஜப்பெருமானுக்கு மஞ்சள் பொடி, மாதுளை, பால், தயிர், கரும்புச்சாறு, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட திரவியங்களால் ஆடல்வல்லானுக்கு நடைபெற்ற மகா அபிஷேகம்.
சிறப்பு அபிஷேகத்தில் சிவகாமி அம்பாள் உடனமர் நடராஜ பெருமான்.
திருப்புவனம் வட்டம் கானூர் கிராமத்தில் உள்ள கோயிலில் நடைபெற்ற திருவாதிரை திருவிழாவின்போது நடராஜப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
கானூர் கோயிலில் நடைபெற்ற திருவாதிரை விழாவில் பங்கேற்ற பக்தர்கள்.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின் போது சிவகாமி அம்பாள் சமேதமாய் நடராஜர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி பிரம்ம தீர்த்தக்கரைக்கு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜர் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.
நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் ஆருத்ரா தரிசன விழா
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற தரிசனத்தில் நடராஜர் வீதியுலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT