அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுக சூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்தார்.கோவில் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது.கரோனா தொற்று காரணமாக திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டது.சூரசம்ஹாரம், சூரபத்மன் என்னும் அரக்கனை தனது வேல் கொண்டு வதம் செய்த முருகனின் வெற்றியைப் போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது.திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில்.