வைணவ ஆச்சாரியரான ராமானுஜரின் ஐம்பொன்னால் ஆன 216 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
உலோகத்தால் செய்யப்பட்ட மிக உயரமான சிலைகளில் ஒன்றாக ராமானுஜர் சிலை கருதப்படுகிறது.'சமத்துவச் சிலை' என பெயரிடப்பட்டுள்ள ராமனுஜர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் ராமானுஜருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.800 டன் எடையுள்ள இந்த சிலையை சுற்றி 108 திவ்ய தேச பெருமாள் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.பிரம்மாண்டமாக நிறுவப்பட்ட ராமானுஜரின் சிலையின் கீழ் பகுதி கர்ப்பக் கிரஹத்தில், 108 கிலோ எடையுள்ள ராமானுஜர் தங்க விக்ரஹம் நிறுவப்பட்டுள்ளது.சிறப்பு பூஜையில கலந்து கொண்டு பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி.ஹைதராபாத்தில், ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயரமுள்ள ராமானுஜர் சிலை.