திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார திருவிழா. 
ஆன்மிகம்

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்  - புகைப்படங்கள்

கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம், முருகனின் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன், முருகனுக்கு அரோகரா என முழக்கமிட்டனர்.

DIN
திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தில், யானை முகமாக முதலில் வந்த சூரபத்மனை ஜெயந்திநாதர் வதம் செய்தார்.
சிங்க முகமாக சூரபத்மன் வர, அவரையும் முருகபெருமான் போரிட்டு வதம் செய்தார்.
சூரபத்மனை வதம் செய்து சேவலாகவும், கொடியாகவும் முருகப் பெருமான் ஆட்கொண்ட போது பக்தி பரவசத்துடன் 'முருகனுக்கு அரோகரா' என பக்தர்கள் முழக்கமிட்டனர்.
சூரசம்ஹாரத்தையொட்டி திருச்செந்தூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
திருமுருகன்பூண்டியில் நடைபெற்ற சூரசம்ஹாரம்.
திருமுருகன்பூண்டியில் சூரனை வதம் செய்ய திருத்தேரில் அருள்பாலித்த சண்முகநாதர்.
சண்முகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சூரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் குமரகோட்டம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டித் திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
பூத்தேரில் காஞ்சிபுரம் மேயர் மகன் ஒய்.சூர்யா முருகன் வேடமிட்டும் ராஜவீதிகளில் உலாவந்து ஆலயத்தின் முன்பாக அசுரர்களை அழிக்கும் நிகழ்ச்சி மரபுப்படி நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT