சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் அறிவித்தபடி காலை 7 மணிக்கு கனக சபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆணித்திருமஞ்சன தரிசன உற்சவம் முடிவுற்று இன்று பால் நிவேத்ய பூஜை முடிவு பெற்றது.ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் முடிந்த நிலையில் இன்று காலை பால் நிவேத்ய பூஜை முடிவு பெற்றவுடன் கனக சபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி.இந்த ஆண்டு ஆனித்திருமஞ்சன தரிசன உத்சவம் ஜூன் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் மீது ஏறி ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானை தரிசிக்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.