இந்தியாவுக்கு வெளியே மிகப்பெரிய ஹிந்து கோயிலான ஸ்ரீ சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில். இத்தாலி பளிங்கு கற்களாலும், பல்கேரியா சுண்ணாம்புக் கற்களாலும் இந்திய கைவினைஞர்களால் செதுக்கப்பட்டு அனுப்பப்பட்டது.
மாலை வேளையில் ரம்மியமான தோற்றத்தில் நியூஜெர்சியில் உள்ள உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான ஸ்ரீ சுவாமிநாராயண் அக்ஷர்தம் கோயில்.நுட்பமான செதுக்கிய சிலைகளை உற்று பார்க்கும் பெண் பக்தை.ஸ்ரீ சுவாமிநாராயண் அக்ஷர்தாமில், கல்வி மற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதி தேவி வீணை வாசிப்பது போல் செதுக்கிய சிலை.நியூஜெர்சியில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில் உள்தோற்றம்.அழகிய கலை வேலைப்பாடுகள் கொண்ட ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில்.சுமார் 183 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த கோயில், பண்டைய இந்து வேதங்களின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.