தூங்கா நகரம், கோயில் நகரம், திருவிழா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி திருக்கல்யாண வைபவமும், அழகர் ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடைபெறும். 
ஆன்மிகம்

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

பச்சை பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலையில் எழுந்தருளிய கள்ளழகர்.

DIN
அழகர் மலையிலிருந்து மதுரை வந்து, வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்துவிட்டு, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த பிறகு மீண்டும் அழகர் மலைக்குத் திரும்பும் வரை மதுரை மக்களின் நினைப்பு அழகரை சுற்றியே இருக்கும்.
தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்.
அழகர்மலையிலிருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டாங்கி பச்சை பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் அருள் பாளிக்கும் கள்ளழகர்.
தங்கை மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் காண அழகர்மலையிலிருந்து இறங்கி மதுரைக்கு வந்த கள்ளழகர் பெருமான்.
தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர்.
கோவிந்தா கோஷத்தில் தங்க குதிரையில் பச்சை நிற பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.
அழகர் மீது தண்ணீரை பாய்ச்சியும் கோவிந்தா கோஷங்களை எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பக்தர்கள்.
மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு வெகு விமிரிசையாக நடைபெற்றது.
தான் கட்டும் பட்டு மூலம் நாட்டில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை உணர்த்திவிடுவார் கள்ளழகர்.
கள்ளழகர் வருகையால் மதுரை மாநகரம் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கியது.
வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்பார்.
தங்கக்குதிரையில் கள்ளழகர்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் கண்கொள்ளா காட்சியை கான பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுவர்.
வைகை ஆற்றில் பக்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

இன்றைய மின்தடை

எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு

SCROLL FOR NEXT