வருடாந்திர அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 28-ல் தொடங்கிய நிலையில், பனிலிங்கத்தை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர். ANI
3,800 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலுக்குச் சென்று இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை இதுவரை பல லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசித்துள்ளனர்.அமர்நாத் யாத்திரைக்கு செல்ல இது வரை பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.52 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை சுமூகமாக நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.52 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிறைவடைகிறது.காவலர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் மற்றும் பிற துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.