மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசாமி கோயில் ராஜா கோபுர கலசத்திற்கு தீட்சிதர்கள் புனித நீர் வார்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பாலாயம் செய்யப்பட்டு கோயிலை முழுமையாக புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.சரியாக காலை 9.30 மணிக்கு, ராஜகோபுரம், பிரகார கோபுரங்கள், யோக நரசிம்மர் சந்நதி, தேர் நிலைகள், கருட ஸ்தம்பம், உடையவர், கூரத்தாழ்வான், வேதாந்த தேசிகர், மணவாளமாமுனிகள் ஆகிய விமானங்களுக்கு தீட்சிதர்கள் புனித நீர் வார்த்தனர்.ராஜகோபாலசாமி கோயில் கும்பாபிஷேகத்தை காண திரண்டு வந்த பக்தர்கள்,மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் கும்பாபிஷேகத்தை காண திரண்டு இருந்த பக்தர்கள், ஆன்மீக ஆர்வலர்கள்.மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாகை பதிப்பு வெளியிடப்பட்டிருந்த தினமணி விளம்பர சிறப்பிதழை பார்க்கும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகள்.