ராதிகாவின் பறவைக் காதல் புகைப்பட வரிசை (டீப் லவ் ஆக்ஷன் ஃபோட்டோகிராபி)
மனிதக்காதலை விட பறவைக் காதல் காணக் காண கொள்ளை அழகு. இந்தப் புகைப்படங்களின் மற்றொரு சிறப்பு.. இவற்றை மிகுந்த ஆவலுடன் எடுத்துப்பதிவிட்டிருப்பவர் இந்தியாவின் முதல் பெண் கானுயிர் புகைப்பட வல்லுநர் ராதிகா ராமசாமி என்பதே!
கார்த்திகா வாசுதேவன்
மூக்கு உரசாம முத்தமிடுவது எப்படின்னு இந்த ஹார்ன்பில்ஸ் கிட்ட கத்துக்கலாமேகுருவியோ, குயிலோ அதுவா முக்கியம்..இந்த ராக்கெட் வால் ட்ராங்கோ பறவை முத்தமிடுவது எப்படின்னு கமல் ஹாசனுக்கே கத்துக் கொடுக்கும் போலிருக்கே!மயில்களின் சம்பாஷனைஷ்... சத்தம் போடாதீங்க... ரோஃபஸ் ட்ரீப்பியோட தவம் கலைஞ்சுடப் போகுது!அடடா... செங்கால் நாரைன்னு அகநானூற்றில் தூது விட்டாங்களே அதான் இது...ஏய் குருவி! சிட்டுக்குருவி ஜோடியோட கூடு கட்டுதாம்..பெல்லி ட்ரீப்பிக்கு இப்படியே.. இப்படியே இருந்து விடக் கூடாதான்னு ஏக்கமோ...எகிப்திய வாத்துக்களின் ஏகாந்த காதல்...