பார்க்கப் பார்க்க அலுக்காத ஆச்சர்யங்களில் ஒன்று மயில். தோகை விரித்து ஆடும் மயிலின் அழகுக்கு மயங்காதவர்கள் இல்லை. 
பிற

தோகை விரித்தாடும் 'மயில்'கள் - புகைப்படங்கள்

மனிதர்கள் எப்படி பேசி, சிரித்து, அழுது, கத்துவதை போல விலங்குகளும் சத்தமிடும். ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் வெவ்வேறு விதமான ஒலியை எழுப்புகின்றன.

DIN
அதிக ஒலியெழுப்பும் பறவைகளில் மயிலும் ஒன்று. சாதாரண நாட்களைவிட, மழைக் காலங்களில் அதிக முறை ஒலியெழுப்பும்.
இந்தியாவின் தேசிய பறவை என இதற்கு மணிமகுடம் சூட்டப்பட்டுள்ளது.
மேகங்கள் திரண்டு, மழை வரும் போது மட்டுமே, மயில்கள் தோகையை விரித்து ஆடுவது வழக்கம்.
மயில்களுக்கு அழகான நீண்ட தோகை இருந்தாலும், நெடும் தூரம் பறக்க இயலாது. தன்னை ஆபத்திலிருந்து காத்துக்கொள்ளவே பறக்கின்றன.
மயில்கள் அடர்ந்த காடுகளில் வாழுவதில்லை. அவை குறைந்த மரங்கள் கொண்ட நிலப்பரப்பிலேயே வாழுகின்றன.
மயிலின் தோகை, நாம் பார்க்கும் கோணத்துக்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களை எதிரொளிக்கும்.
மீன்கள் மட்டுமன்றி தவளைகள், பூச்சிகள் மற்றும் எலிகளை வேட்டையாடித் தின்று விவசாயிகளுக்கும் பயனுள்ள ஒரு பறவையாக கொக்குகள் விளங்குகின்றன.
நீரில் அசையாமல் நின்றபடி காத்திருந்து இரையைப் பிடிக்கும்.
வக் வக் என சத்தமிடும் கொக்கு.
குளங்கள், கண்மாய்கள் மற்றும் ஏரிகளில் தாவரங்கள் நிரம்பிய பகுதிகளில் இவற்றைக் காணலாம்.
பின்னி பிணையும் கொக்கு.
கொக்கு வகையைச் சோ்ந்த இந்த பறவை அழிந்து வரும் பறவைகள் இன பட்டியலில் உள்ளது.
குரங்குகளின் செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் பல நிலைகளில் மனிதர்களுடன் ஒத்துப் போகின்றன.
மனிதனை போல சேட்டை செய்யும் திறமை குரங்குகளுக்கு உண்டு.
தாழ்வான மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் கிங்ஃபிஷர் பறவை.
உணவு தேடும் கிங்ஃபிஷர்.
கூடு கட்டுவதற்கு நீர் நிலையை ஒட்டிய உயரமான தென்னை, பனை, வேம்பு, முட்கள் நிறைந்த மரங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் பறவைகள்.
ஆண்பறவை தான் கூடு கட்டும். காய்ந்த புல், வைக்கோல் , நீண்ட இலைகள் போன்றவற்றை சேகரித்து வந்து கூடு கட்டும்.
காற்று வீசும் திசையை கணித்து அதற்கேற்ப கூண்டின் குடுவைப்பகுதியும் , நீண்ட பகுதியும் அமைக்கப்படும்.
ஆந்தையின் பார்வை திறன் அதிகம் என்பதால் அதனால் வெகு தொலைவில் இருக்கும் இரையை கூட தெள்ள தெளிவாக பார்க்க முடியும்.
புலிகள் பெரும்பாலும் மறைவிடம், அதிகம் இரை உள்ள நீர்நிலைகளின் அருகில் காணப்படும்.
புலிகள் பாலூட்டி வகையை சேர்ந்தது. புலிகள் மாமிசம் மட்டுமே உண்ணும்.
புலிகள் நன்கு நீந்துபவை. மேலும் ஒரே தாவலில் 20 முதல் 30 அடி முன்னோக்கி பாயும் திறன் கொண்டது புலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT