மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தொடங்கியது. 
பிற

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு - புகைப்படங்கள்

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர் வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

DIN
ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தி விடைபெற்றார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.
இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் காலமானார்.
மெலடி குயின் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
லதா மங்கேஷ்கர் 1929ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி இந்தூரில் பிறந்தார்.
தந்தையின் நாடகங்களில் லத்திகா என்னும் பாத்திரத்தில் அவர் நடித்து வந்த நிலையில் அவரை லதா என்று அழைக்கத் தொடங்கி, அதுவே அவரது பெயராக மாறி போனது.
லதா மங்கேஷ்கர் இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.
கலைத் துறையில் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1989ஆம் ஆண்டு பெற்றார்.
நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருதை 2001ஆம் ஆண்டு லதாவுக்கு வழங்கப்பட்டது.
தனது 13வது வயதில் பாடல்களை பாடத் தொடங்கினார் லதா.
கமல்ஹாசன் நடிப்பில் சத்யா திரைப்படத்தில் ‘வளை யோசை கலகலவென’, பிரபு நடித்த ஆனந்த் படத்தில் ‘ஆராரோ ஆராரோ’, 'எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்' உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்.
சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார் லதா மங்கேஷ்கர்.
பழம் பெரும் பாடகியான லதா மங்கேஷ்கரின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி.
பழம் பெரும் பாடகியான லதா மங்கேஷ்கரின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!

சர்வதேச காற்றாடித் திருவிழா! பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT