அமாவாசை நாளில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போதும், அதாவது இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.அக்டோபா் 25-ஆம் தேதியன்று பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது.இந்தியாவில் பல பகுதிகளில் சூரிய கிரகணம் மாலை 5 மணியளவிலிருந்து தெரிய துவங்கியது.உலகத்தின் பல பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்டது.இந்தியாவில், குஜராத் மாநில துவாரகாவில் சூரிய கிரகணம், நீண்ட நேரம் நீடித்தது.கிரகண சமயத்தில் கர்ப்பிணிகள் வெளியில் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.கிரகண நேரத்தில் உணவு சாப்பிடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கிரகண நேரத்தில் நோயாளிகள் வெளியே செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இதுவே.சூரிய கிரகணத்தை வெறுங்கண்களால் பார்க்கக் கூடாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.