முகப்பு
பிற

நினைவு நாள்: பாடும் நிலா எஸ் பி பாலசுப்பிரமணியம் - புகைப்படங்கள்

பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தன் திறமையை நிரூபித்தவர். பாடல்கள் வழியாகவும் ரசிகர்களுக்கு திகட்டாத தேன்மழை பொழிந்தவர். இந்த மந்திர குரலுக்குச் சொந்தக்காரரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் விண்ணுலகம் சென்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
ஆறு தேசிய விருதுகள் பெற்றுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம், 2001-ல் பத்மஸ்ரீ-யும், 2011-ல் பத்மபூஷன் விருதும் இவரை அலங்கரித்தது.
பகிர்:
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மன் குறித்த புத்தகத்தை வெளியிட்ட திரைப்படத் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
விழா மேடையில் கெளரவிக்கப்பட்ட பாடகர்களான எஸ்.பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் மற்றும் கே ஜே யேசுதாஸ்.
இருபதாம் ஆண்டு நிறைவையொட்டி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை கெளரவித்த ஸ்ரீ லால்குடி ஜி ஜெயராமன். உடன் நடிகர் ஒய். ஜி. மகேந்திரன், ஒய்.ஜி. ராஜலட்சுமி பார்த்தசாரதி மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி.

Advertisement

சென்னை நாரத கான சபாவில் கெளரவிக்கப்பட்ட நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், தொழிலதிபர் நல்லி குப்புசாமி மற்றும் பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
பாடகி உஷாவின் பக்திப் பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
கங்கா காவிரி திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் கலந்து கொண்ட பிரபல பாடகர்கள் பி பி சீனிவாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி, பி. சுசிலா, கன்னடத் திரைப்படத் நடிகை அக்ஷயா உள்ளிட்டோர்.
மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 86வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு சோம வள்ளியப்பன் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 86வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பாடகி அருணா சாய்ராம்.
'நெஞ்சே எழு' லைவ் மியூசிக் கச்சேரியில் கலந்து கொண்ட திரைப்பட பின்னணி பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சீனிவாஸ், கார்த்திக், ஹரிச்சரன் மற்றும் விஜய் பிரகாஷ் ஆகியோருடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.
பின்னணி பாடகர்களான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ்.பி. சைலஜா.
பாடகர்கள் எஸ்.ஜானகி, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆகியோருடன் இசைஞானி இளையராஜா.
இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'இசை கொண்டாடும் இசை' நிகழ்வின் துவக்க விழாவின் போது ரமண மகர்ஷியின் படத்தை இளையராஜாவிடம் வழங்கிய பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
கல்யாணோத்ஸவத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமண்யம் மற்றும் வினயா பிரசாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments