முகப்பு
வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி: உடனே விண்ணப்பிக்கவும்!

பந்தாரா வெடிமருந்துத் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 50 தொழில்பழகுநர் பயிற்சி குறித்து...

Updated On : 8 ஏப்ரல், 2026 at 10:07 AM
டிப்ளமோ முடித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி - கோப்புப்படம்
பகிர்:

மஹாராஷ்டிரம் மாநிலம், பந்தாரா வெடிமருந்துத் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 50 தொழில்பழகுநர் பயிற்சிக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சியின் பெயர்: Technician Apprentice

காலியிடங்கள்: 50

Advertisement

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Diploma in Chemical Engineering - 10

2. Diploma in Mechanical Engineering - 10

3. Diploma in Electrical Engineering - 15

4. Diploma in Electronics Engineering - 15

தகுதி: பொறியியல் துறையில் பயிற்சி வழங்கப்படும் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.10,900 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விபரம் தபால், மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

ஏற்கெனவே அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.ddpdoo.gov.in என்ற இணையதளத்தில் மேற்கண்டபயிற்சி பற்றிய விபரம் மற்றும் விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களுடன் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் முகவரி: The Chief General Manager, Ordnance Factory, Bhandara, Jawahar Nager (Post), Bhandara (Dist).

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 11.4.2026

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

The Selection will be based on the merit list prepared on marks obtained by the candidates in the Final Year Examination of diploma (i.e. aggregate of all years) and Document Verification followed by Medical Examination and Police Verification Report.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments