விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் வெடிமருந்து தொழிற்சாலையில் தொழில்பழகுநர் பயிற்சி!
அருவங்காடு ராணுவ வெடிமருந்து தொழிற்சாலையில்பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி குறித்து...
நீலகிரி மாவட்டம். அருவங்காட்டில் உள்ள ராணுவ வெடிமருந்து தொழிற்சாலையில் (கார்டைட் தொழிற்சாலை) பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுயும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரங்கள் வருமாறு:
பயிற்சியின் பெயர்: Graduate Apprentice (Engineering)
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 20
பிரிவு வாரியான காலியிடங்கள்: கெமிக்கல் - 14, மெக்கானிக்கல் - 5, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 1,
தகுதி: பொறியியல் துறையில் பயிற்சி வழங்கப்படும் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர்: Technician Apprentice
காலியிடங்கள்: 20
பிரிவு வாரியான காலியிடங்கள்: கெமிக்கல் - 14, மெக்கானிக்கல் - 4, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 1, சிவில் -1, கணினி அறிவியல் - 1
தகுதி: பொறியியல் துறையில் பயிற்சி வழங்கப்படும் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
உதவித் தொகை: பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.12,300, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.10,900 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: பட்டயம், பட்டம் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.
பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விபரம் தபால், மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். ஏற்கனவே தொழில்பழகுநர் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.ddpdoo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து "The Chief General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiri" என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 16.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Advertisement for engagement of Graduate Apprentices - 20 Nos, Diploma Apprentices - 20 Nos at Cordite Factory Aruvankadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.