விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஆயுதத் தொழிற்சாலையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வேலை!
ஆயுதத் தொழிற்சாலையில் காலியாகவுள்ள திட்டப் பொறியாளர் பணியிடங்கள் குறித்து...
ஆயுதத் தொழிற்சாலையில் காலியாகவுள்ள திட்டப் பொறியாளர் பணியிடங்களுக்கு ராணுவ வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் தயாரித்தல், கையாளுதலில் பயிற்சி பெற்ற, வேதியியல், இயந்திரவியலில்(மெக்கானிக்கல்) பிஇ, பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 1914/02/OFDR/Tenure Based/Project Engineer/2026
பணி: Graduate/ Diploma Project Engineer
Advertisement
Advertisement
மொத்த காலியிடங்கள்: 13
1. மெக்கானிக்கல் - 7
2. கெமிக்கல் - 6
சம்பளம்: மாதம் ரூ.36,000 - 39,338
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வெடிமருந்து உற்பத்தி தொழிற்சாலையில் தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு: 21.5.2026 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஒபிசி, முன்னாள் ராணுவத்தினருக்கு சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: பட்டயம், பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் முறை மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ddpdoo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chief General Manager, Ordnance Factory,Dehu Road, Pune District, Maharastra, ΡΙΝ: 412 101.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 21.5.2026
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Offline applications are invited for Engagement of Graduate, Diploma engineers as Tenure based Graduate,Diploma Engineers having Apprentice in...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.