படத்தின் பூஜை 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது.
வலிமை படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது.ஈஸ்வர மூர்த்தி’ என்ற பெயரில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.படத்தின் போஸ்டர்கள் மற்றும் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர்.யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றி வருகிறார்.வலிமை படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மனதில் நல்ல எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.