'கோப்ரா' படத்தின் ப்ரோமோவை முன்னிட்டு படக்குழுவினர் திருச்சி மற்றும் மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களையும் கல்லூரி மாணவர்களையும் சந்தித்து உரையாடினர்.
அஜய் ஞானமுத்து மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'கோப்ரா'.கோப்ரா படத்தின் ப்ரோமோவில் கலந்து கொள்ள விமான நிலையத்துக்கு வரும் நடிகர் விக்ரம்.ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்பத்தின் திரையரங்கு உரிமையை 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' கைப்பற்றியுள்ளது.
Advertisement
Advertisement
அஜய் ஞானமுத்து எழுதி இயக்கும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'கோப்ரா' படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த நடிகர் விக்ரம்.விமானத்திலிருந்து வரும் நடிகர் விக்ரம்.
திருச்சி விமான நிலையத்தில் நடிகர் விக்ரம்.கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடும் வகையில், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த நடிகர் விக்ரம்.படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி.
விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்து அசத்தியுள்ளதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டியும், வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்துள்ளனர்.செவன்த் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது.
கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை பார்த்து கையசைக்கும் நடிகர் விக்ரம்.தனது வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்துக் கொண்டு காரில் புறப்பட்ட நடிகர் விக்ரம்.சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களையும், கல்லூரி மாணவர்களையும் சந்தித்து உரையாடிய கோப்ரா படக்குழுவினர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.