'டியர்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
சினிமா
டியர் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்
ஜி.வி.பிரகாஷ் குமார் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் 'டியர்'. ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தை ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். நட்மெக் புரொடக்ஷன்ஸ் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி இணைந்து தயாரித்துள்ளனர். காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உள்பட பலர் நடித்துள்ளனர்.
DIN
டியர் படத்தின் படப்பிடிப்பு, சென்னை, இடுக்கி, குன்னூர் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள 'டியர்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.திட்டமிட்டபடி 35 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.