தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ள நட்ராஜ் தற்போது 'வெப்' படத்தில் நடித்துள்ளார்.
படத்தில் நட்ராஜுக்கு ஜோடியாக அனன்யா மணி, சுப ப்ரியா மலர், சாஸ்திரி பாலா, ப்ரீத்தி என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் நட்ராஜூக்கு முக்கிய இடம் உண்டு.புதுமையான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஹாரூன் இயக்கியுள்ளார்.படத்தை ட்ரீம் ஹவுஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரித்து உள்ளார்.வெப் படம் ஆகஸ்ட் 4-ம் தேதி திரைக்கு வருகிறது.