நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலில்ம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார்.எஸ்.கே.21 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடைபெற உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க உள்ளாராம்.சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் படத்தினை, உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.படப்பிடிப்பு இனிதே தொடங்கியதாக படக்குழு தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.படத்தின் பூஜை விழாவில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.