கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று (ஜூலை 12) தொடங்கியது.
படப்பிடிப்பு வரும் ஜூலை 15-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிப்பு.பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார்.முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, ரித்விக், முனிஷ்காந்த், அவினாஷ், யுகி சேது, பாலாஜி சக்திவேல் என முந்தைய படத்தில் இருந்த அதே குழு இந்தப் பாகத்திலும் தொடர்கிறது.