சசிகுமார் நடிப்பில் உருவாகும் ஃப்ரீடம் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14' எனப் பெயரிட்டுள்ளனர்.உண்மைக் கதைகளைத் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம்.ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.சசிகுமாரும் லிஜோமோல் ஜோஸும் இலங்கை அகதிகளாக நடித்துள்ளனர்.