ஹிந்தி படமான 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் கலந்து கொண்ட நடிகர் தனுஷ்.
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தேரே இஸ்க் மெய்ன்.படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார்.தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். தமிழி, ஹிந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் நவம்பர் 28ஆம் வெளியாக உள்ளது.படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உள்ள நிலையில் காதல், ஆக்சன் காட்சிகளுடன் கூடிய ஏ. ஆர். ரகுமானின் பின்னணி இசை ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.