தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 180&க்கு மேற்பட்ட படங்களில் நடித்த 'உலக நாயகன்' கமல்ஹாசன்.
நடிகர், டான்ஸ் மாஸ்டர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடகர், கவிஞர், இயக்குநர், சினிமா தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.1960-ல் களத்தூர் கண்ணம்மா படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசுத் தலைவர் விருதை வென்றார்.மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் ஆகிய படங்களுக்காக தேசிய விருது வென்றார்.ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிக முறை வென்ற நடிகர் என்கிற பெருமையும் கமலுக்கு உண்டு.16 வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், இந்தியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் ஆகிய படங்களுக்காக மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.