முகப்பு
நிகழ்வுகள்

விதவிதமான விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி வரும் 25ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், இதற்காக பல்வேறு வடிவங்களில் விதவிதமான வண்ணங்கள் தீட்டப்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 2 அடி முதல் 15 அடி வரையிலான சிலைகள் தயாராகி வருகின்றன. சிவன் பார்வதியுடன் இணைந்த விநாயகர், லட்சுமி-சரஸ்வதியுடன் இணைந்த விநாயகர், மூன்று முக விநாயகர், ஐந்து முக விநாயகர், நின்ற நிலை விநாயகர், அமர்ந்த நிலை விநாயகர், சயன விநாயகர், சிம்ம வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு தோற்றங்களில் சிலைகள் செய்யப்பட்டுள்ளன. சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தற்போது முடிவடைந்தது என்றார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →