முகப்பு
உலகம்

லண்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய மாணவர்கள் 2 பேர் பலி

லண்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய மாணவர்கள் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 9:35 PM
தீ விபத்து.. - File Photo | Pexels
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 9:17 PM

லண்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய மாணவர்கள் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள குரோய்டனில் உள்ள வாடகை வீட்டில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி தீ பிப்ரவரி 23 அன்று விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் குரோய்டன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 9:31 PM

பலியான இரண்டு மாணவர்களும் தெலங்கானாவின் நிஜாமாபாத்தைச் சேர்ந்த காமினேனி சாய் ஸ்ரீகர்(26) மற்றும் ஆந்திரத்தின் காக்கினாடாவைச் சேர்ந்த காந்தி அபிஷேக்(28) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் பொறியியல் படிப்பை முடித்த பிறகு அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற ஸ்ரீகர் லண்டனுக்குச் சென்றிருந்தார்.

Advertisement

பல நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் மூளைச் சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பலியாகிவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. நிஜாமாபாத்தில் உள்ள குடும்பத்தினர் அவரது உடலை விரைவில் இந்தியாவுக்குக் கொண்டுவருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 9:31 PM

மூன்றாவது மாணவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய லண்டன் தீயணைப்புப் படை மற்றும் பெருநகர காவல் துறை இணைந்து கூட்டு விசாரணை நடத்தி வருகின்றன. தீ வேகமாகப் பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

summary

Two Indian students died in London after a devastating fire, while another student who shared the house was injured and is currently undergoing treatment in a hospital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.