களைகட்டும் ஆயுதபூஜை வியாபாரம்
நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பூக்கள் பழங்கள் விற்பனை, பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது. இதையொட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் திரண்டு ஆர்வத்துடன் பூ, பூசணிக்காய் மற்றும் பழங்கள் வாங்கி சென்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அதிக அளவிலான மக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதேபோல் வாழை கன்று, மாவிலை தோரணம் மற்றும் பூஜை சாமன்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.