சூரிய கிரகணம் காண பொதுமக்கள் ஆர்வம்
இன்றைய சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் என்றும், சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும். கிரகணத்தை காண மாணவர், மாணவிகள், சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் வரிசையில் நின்று தொலைநோக்கி மூலமும், பிரத்யேக கண்ணாடிகள் அணிந்தும் கண்டு ரசித்தனர்.