தமிழகத்தில் இரண்டு வார ஊரடங்கு அறிவித்ததுள்ள நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர்.
நீண்ட வரிசையில் நின்று தேவையான மதுபானங்களை வாங்கி செல்லும் மதுப்பிரியர்கள்.டாஸ்மாக் கடைகள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எலைட் மதுபானக்கடைகளில் கூட்டம் நிரம்பியது.மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது.மதுக்கடையை மூடிவிடுவார்களோ என்று அஞ்சிய மதுப்பிரியர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி குவித்தனர்.வரிசையில் காத்திருந்து மது வகைகளை பைகளிலும், பெட்டிகளிலும் வாங்கி சென்ற மதுப்பிரியர்கள்.திருத்தணி டாஸ்மாக் கடையில் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள்.