தில்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டட பணியை பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பகிர்:
கட்டட பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி.64 ஆயிரத்து 500 சதுரமீட்டர் பரப்பில் உருவாகும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும்.21 மாதங்களில் அதாவது 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் புதிய நாடாளுமன்றக் கட்டட பணிகள் முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது,.தற்போது தில்லியில் உள்ள நாடாளுமன்றம் கட்டடம் 93 ஆண்டுகள் பழமையானது.கட்டட பணிகளை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி.கட்டடப் பணிகளின் நிலை, எப்போது கட்டிடப் பணிகள் முடியும், நாள்தோறும் நடக்கும் பணி ஆகிய நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும்.விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களை உருவாக்கப்பட உள்ளன.கட்டட பணிகளை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி.கட்டட பணிகளை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி.கட்டட பணிகளை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி.கட்டிட பணிகளை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி.புதிய நாடாளுமன்ற கட்டடம் 2022-ம் ஆண்டுக்குள் கட்டுமான பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதே ஆண்டில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.