FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர் மீது பாலியல் தொந்தரவு வழக்கு!

பாலியல் தொந்தரவு வழக்கில் மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர்....

Updated On : 2 மார்ச் 2026, 1:03 pm IST
இயக்குநர் சிதம்பரம்
பகிர்:

இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் தொந்தரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.

தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

Advertisement

Advertisement

தற்போது, சிதம்பரம் ’பாலன் தி பாய்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இக்கதை ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியது.

இந்த நிலையில், தெற்கு எர்ணாகுளம் காவல் நிலையத்தில் சிதம்பரம் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட பின், சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரில் சினிமா துறையில் இருக்கும் அந்த இளம்பெண்ணை கடந்த 2022 ஆம் ஆண்டு சிதம்பரம் பாலியல் ரீதியாகப் தொந்தரவு செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை துவங்கியுள்ளதால் விரைவில் சிதம்பரம் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்படலாம் எனத் தெரிகிறது..

summary

director chidambaram booked for outraging modesty of woman...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments