இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்துநொறுக்கியத்துடன் வீட்டிற்கும் தீ வைத்தனர்.
ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீக்கிரையாக்கிய போராட்டக்காரர்கள்.இலங்கை பிரதமருக்கு சொந்தமான வாகனத்தை அடித்து நொறுக்கியதுடன், வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர்.பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்த போதிலும்,போராட்டக்காரர்களின் ஆவேசம் தணியவில்லை.இலங்கையில் மக்கள் போராட்டம் கடந்த சில நாட்களாகவே தீவிரமடைந்தது வருகிறது.மக்களின் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவர முடியாத சூழலில் தவிக்கும் இலங்கை.கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில் போராடும் போராட்டக்காரர்கள்.