அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் சிலை பிராணப் பிரதிஷ்டை முன்னிட்டு கோயில் முழுவதும் மலா்கள் மற்றும் சிறப்பு விளக்குகளால் அலங்கரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கோயில் முழுவதும் மலா்கள், சிறப்பு விளக்குகளால் அலங்கரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.ராமா் கோயிலில் சிலை பிரதிஷ்டை முன்னிட்டு ஹெலிகோப்பர் மூலம் டன் கணக்கில் பூக்கள் தூவப்பட்டது.சிலை பிரதிஷ்டை விழாவிற்கு முன்னதாக இரவில் மின்னும் ராமர் கோயில்.கோயில் கட்டுமானத்தின் கலைநயம் மற்றும் சிற்ப வேலைபாடுகளை எடுத்துக்காட்டும் வகையில் பிரத்யேக அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.சிலை பிரதிஷ்டை விழா மதியம் 12.20 மணிக்கு தொடங்கி 1 மணியளவில் நிறைவடையும்.சிலை பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்புச் சடங்குகள், ராமா் கோயிலில் கடந்த சில நாள்களாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது.10,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.விழாவிற்கு முன்னதாக காவலுக்கு நிற்கும் விரைவு அதிரடிப் படை வீரர்கள்.குடமுழுக்கு விழாவிற்கு முன்னதாக அயோத்தியின் ராமர் கோயிலின் செயற்கைக்கோள் படம் வெளியிட்ட இஸ்ரோ.அதிக அளவில் மலா்களைப் பயன்படுத்தி அலங்காரப் பணிகள் நடைபெற்று வருகிறது.ராம்பாத்தில் பக்தர்கள் கூட்டம்.விழாவிற்கு முன்னதாக ராமர் வேடமிட்ட பக்தர்கள்.நாட்டின் பல்வேறு புண்ணிய தீா்த்த கட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரை கொண்டு கோயில் கருவறை முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது.ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்கள்.ஹெலிகோப்பர் மூலம் டன் கணக்கில் பூக்கள் தூவப்பட்டு வரும் நிலையில், முக்கிய நிகழ்வான மூலவா் சிலை பிராண பிரதிஷ்டை விழா, பிரதமா் மோடி முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.ராமர் சிலை பிரதிஷ்டை விழா முன்னதாக மாணவர்கள் வரைந்த ராமரின் 'ரங்கோலி' கோலம். இடம்: மிர்சாபூர்.கிஷ்கிந்தா க்ஷேத்திரத்தில் உள்ள ஹனுமானின் பிறப்பிடமான அஞ்சனாந்திரி மலையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அனுமன் சந்நிதி முன் நடத்தப்பட்ட யாகம்.பாதுகாப்பு முன்னிட்டு சரயு நதியில் படகில் ரோந்து வரும் காவலர்கள்.ராமர் கட்-அவுட்களால் அலங்கரிக்கப்பட்ட சாலை.