ஆரூரா, தியாகேசா என்ற பக்தி கோஷம் விண்ணைப் பிளக்க, பச்சைக் கொடி அசைய, கீழவீதியிலிருந்து மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் ஆடி அசைந்தபடி புறப்பட்ட ஆழித்தேர்.
ரிஷபக் கொடி உச்சியில் பறந்தபடி சென்ற ஆழித்தேர்.ஆகமவிதிகளின்படி, பங்குனி ஆயில்ய நட்சத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற்றது.சைவ பீடங்களில் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்குகிறது.ஆசியாவிலே மிக பெரியதேர் என அழைக்கப்படும் திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் ஆழித்தேரோட்டம், வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆசியாவிலே மிக பெரியதேர் என அழைக்கப்படும் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை.ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.