நாடு முழுவதும் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில் கன்னியாகுமரியில் விநாயகர் சிலைகளை, காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புடன் வழிபாடு செய்த பிறகு கிரேன் மற்றும் டிராலி உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டன.
பிரம்மாண்ட சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த ஒருவாரமாக வழிபாடு செய்து வந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் பலத்த பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்.கன்னியாகுமரியில் விநாயகர் சிலைகளை மேதள தாளம் முழங்க கொண்டாட்டத்துடன் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கடலில் கரைத்தனர்.ஹூப்பள்ளியில் ஊர்வலமாக எடுத்து வரப்படும் விநாயகர் சிலைகள்.பெங்களூரில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பு வழிபாடு செய்த பிறகு கடலில் கரைக்கப்பட்டன.பெங்களூரில் கிரேன் உதவியுடன் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள்.மொராதாபாத்தில் விநாயகர் சிலைகளை குளங்கள், கடற்கரை ஆகிய நிர்நிலைகளில் கரைத்தனர்.சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் முன் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வரும் பக்தர்கள்.கான்பூரில் ஊர்வலமாக எடுத்து வரப்படும் விநாயகர் சிலைகள்.சென்னை மெரினா கடற்கரையில் கிரேன் உதவியுடன் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள்.சென்னை மெரினா கடற்கரையில் விநாயகர் சிலையை கடலில் கரைக்கும் பக்தர்கள்.