சென்னை மீனம்பாக்கத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் டயர் வெடித்ததால், சுதாரித்து விமானி விமானத்தை ஓடுபாதையில் நிலை நிறுத்தி விபத்தைத் தவிர்த்தார். டயர் வெடிப்பால் பிரதான ஓடுதளம் இயக்கப்படவில்லை என்றும் அதற்கு பதில் மாற்று விமான ஓடுதளத்தில் விமானங்கள் தற்போது இயங்கி வருகின்றன.