முகப்பு
செய்திகள்

பொதுமுடக்கம்: சென்னை சாலைகள் வெறிச்சோடின - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
ஊரடங்கால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை- கோயம்பேடு சாலை போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பகிர்:
வெறிச்சோடிய வேளச்சேரி பிரதான சாலை.
சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன.
வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிய சென்னை அசோக் பில்லர் சாலை.
கடந்த 5 நாட்களாக இரவு 10 மணியளவில் இருந்து அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டது.
பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியிருந்ததால் சாலைகள் வெறிச்சோடின.
அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தவிர வேறு வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மருத்துவமனைகள், மருந்துக்கடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து உணவகங்கள், பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
மீன் மார்க்கெட் பகுதிகள் மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவை ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.
சென்னையில் ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடிக்கிடந்தது.
முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் சென்னையில் அம்மா உணவகங்கள் இன்று வழக்கம் போலவே செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
சென்னையில் சாலையோர கடைகள், தள்ளுவண்டி உணவகங்கள் என அனைத்தும் மூடப்பட்டது.
பொது மக்களும் வீடினுள்ளேயே முடங்கியதால் பாலைவனமாக காட்சியளித்த சென்னை சாலைகள்.
ரயில், விமான சேவை வழக்கம் போல் இயங்கியது.
வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்.
வெறிச்சோடிய சாலையில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்.
கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்.
தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30 வரை அமலில் இருக்கும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
முழு கட்டுரையைப் படிக்க →