நாட்டில் 140 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:
கரோனா பேரிடருக்கு எதிரான உலகப் போரில், ஒரே பேராயுதமாகக் கருதப்படுவது கரோனா தடுப்பூசி.நாட்டில், ஜனவரி மாதம் 16ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.ஆரம்பத்தில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.அந்த நிலை மெல்ல மாறியது. தடுப்பூசி முகாம்களில் கூட்டம் அலைமோதியது.தடுப்பூசி போடும் முகாம்கள் அதிகரிக்கப்பநாட்டில் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம், சரியாக 278 நாள்களுக்குப் பின் அதாவது, அக்டோபர் 21ஆம் தேதட்டு, வாரந்தோறும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.டிசம்பர் இறுதியில் இது 140 கோடியைத்தாண்டியுள்ளது.நாட்டில் அதிக கரோனா தடுப்பூசிகள் செலுத்தி முதலிடத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளதுகரோனா இரண்டாம் அலையால் நாடு தத்தளித்துக் கொண்டிருந்த போது, நாட்டின் சுகாதாரத் துறை மற்றொரு பக்கம் கரோனா தடுப்பூசி செலுத்துவதிலும் அக்கறை செலுத்தியது.கரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய போது, அது பற்றிய விழிப்புணர்வோடு சேர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வது பற்றி பல்வேறு புரளிகளும் பரவின.தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அசைவம் சாப்பிடக் கூடாது, மது அருந்தக் கூடாது, இதய நோய் இருப்பவர்கள் தடுப்பூசி போடக் கூடாது என..இவை அனைத்தையும் புரளி என்று புறந்தள்ளிக் கடக்க ஒரு சில மாதங்கள் ஆகின.கரோனா தடுப்பூசி போட்டுச் சாவதை விட, போடாமல் கரோனா வந்து சாவது அதிகம் என்பதை மத்திய, மாநில அரசுகள் மக்களிடையே எடுத்துச் சொல்ல கணிசமான காலம் எடுத்துக் கொண்டது.ஆரம்பத்தில் வெறிச்சோடிய தடுப்பூசி முகாம்கள் என்ற நிலை மெல்ல மாறியது.பிறகு மணிக் கணக்கில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.கரோனா இரண்டாவது பேரிடரில் ஏற்பட்ட பெரும் பாதிப்பு, மக்களை கரோனா தடுப்பூசி முகாம்களை நோக்கி அழைத்து வந்தது.ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு, முகாம்களுக்குச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் வாய்ப்பும், உருவாக்கப்பட்டது.. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகே முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி போடும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது.தடுப்பூசி போடுவது அதிகரிக்க அதிகரிக்க, நாள்தோறும் கரோனா உறுதியாகும் விகிதம் குறையத் தொடங்கியது.தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளிவிவரங்கள் வெளிவந்தன.கிராமங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத் துறையினர் கடும் சிரமங்களுக்கு இடையே மேற்கொண்டனர்.நாட்டில் இதுவரை 140 கோடி தடுப்பூசியை செலுத்தி சுகாதாரத் துறை சாதனை படைத்துள்ளது.நாட்டில் இதுவரை 140 கோடி தடுப்பூசியை செலுத்தி சாதனை படைத்துக் கொண்டிருப்பதற்கு, சுகாதாரத் துறைக்கு ஒரு சல்யூட்.