உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கரில் கட்டப்படவுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் பூமி பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
பூமி பூஜையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சண்முகம், சம்பத், தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, பிரபு, மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வர் பழனிசாமிக்கு பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்ற நிலையில், 50க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் யாக சாலை பூஜைகள் துவங்கின.திருக்கோவில் கல்வெட்டை திறந்து வைத்த முதல்வர்.